FEATUREDLatestNewsSRILANKA

இலங்கையின் முதல் நானோ செயற்கைக்கோள்!!!

இலங்கையின் முதல் நானோ செயற்கைக்கோள்!!!
இலங்கையின் முதல் நானோ செயற்கைக்கோள், ராவணா -1 ஜூன் 17 அன்று பூமியிலிருந்து 400 கி.மீ தூரத்தில் ஒரு சுற்றுப்பாதையில் செலுத்தப்பட்டது, பூமியின் முதல் படத்தை அனுப்பியது.

பேராதனை பல்கலைக்கழகத்தை மற்றும் நவீன தொழில்நுட்பங்களுக்கான ஆர்தர் சி. கிளார்க் நிறுவனத்தைச் சேர்ந்த தரிந்து தயரத்ன மற்றும் துலானி சாமிகா ஆகிய இரு இலங்கை பொறியாளர்களால் தயாரிக்காப்பட்ட ஒரு ஆராய்ச்சி செயற்கைக்கோள் RAAVANA-1 ஆகும்

இலங்கை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளை படம்பிடிப்பது உட்பட ஐந்து பணிகளை இந்த செயற்கைக்கோள் நிறைவேற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செயற்கைக்கோள் ஜப்பானில் உள்ள கியுஷு இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டது. இது 1,000 கன செ.மீ அளவு மற்றும் 1.1 கிலோ எடை கொண்டது. இது அதிகாரப்பூர்வமாக பிப்ரவரி 18 அன்று ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இது ஏப்ரல் 18 அன்று வர்ஜீனியாவின் வாலப்ஸ் தீவில் உள்ள நாசாவின் வாலப்ஸ் விமான நிலையத்தில் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்டது. இந்த செயற்கைக்கோள் சிக்னஸ் சரக்கு விண்கலத்தை ஏந்திய அண்டாரஸ் ராக்கெட்டில் ஏறி மறுநாள் சர்வதேச விண்வெளி நிலையத்தை அடைந்தது.

பாமரன் படுகிழவன் :

விண்கலம் எல்லாம் அனுப்புறீங்க
ஆனால் உள்நாட்டு வில்லங்கங்களைத்தீர்த்தால்
மிகச் சிறப்பு.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *