FEATUREDLatestPoliticsSRILANKA

the ban on playing the national anthem in the Tamil language at Independence Day

the ban on playing the national anthem in
the Tamil language at Independence Day
The government should reconsider the ban on playing the national anthem in
the Tamil language at Independence Day, which will again lead to ethnic cleansing in
the country.
Sri Lanka’s 72nd Independence Day will be held on February 4 at Independence Square.
The Minister of Public Administration, Home Affairs, Provincial Councils and
Local Government has announced that the National Anthem will be played in Sinhala only.
Tamils, Muslims and Sinhalese rallied in unison to liberate Sri Lanka from the colonial
clutches. They participated in the freedom struggle, highlighting the nation’s racial,
religious and caste differences.

The national anthem was played in both languages ​​at the 1949 Independence Day celebrations.
However, for narrow political purposes, that practice has been changed over time and only
the Sinhala language is given priority.

The politics of promoting racism and bigotry has begun to create a rift between races.
In particular, the people who lived in unity were forced to break up into ethnic groups
due to the activities of the Sinhala language and religion.
Thus, the impact on the country cannot be explained by mere words.
The scars in the minds of the people are still not fully healed by divisive maneuvers.
The national anthem is played in several languages, including South Africa and Canada.
Because of that, harmony has been strengthened in those countries. Therefore,
the government should reconsider its decision to play the national anthem in Sinhala only.

சுதந்திர தின நிகழ்வில் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளமையானது நாட்டில் மீண்டும் இன ரீதியிலான முறுகலுக்கு வழிவகுக்கும் என்பதால் இது தொடர்பில் அரசாங்கம் மீள் பரிசீலனை செய்ய வேண்டும்.

இலங்கையின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி சுதந்திர சதுக்கத்தில் நடைபெறவுள்ளது. இதன்போது சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் இசைக்கப்படும் என பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர்  அறிவித்துள்ளார்.

“காலனித்துவ பிடிக்குள் இருந்து இலங்கை திருநாட்டுக்கு விடுதலை பெற்றுக் கொடுப்பதற்காக தமிழ், முஸ்லிம், சிங்களம் என அனைத்து இன மக்களும் ஓரணியில் திரண்டு போராடினார்கள். இன, மத, குல பேதங்களுக்கு அப்பால் தேசம் மீதான பற்றை முன்னிலைப்படுத்தியே சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றனர்.

1949 ஆம் ஆண்டு நடைபெற்ற சுதந்திர தின விழாவில் இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. எனினும், குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக அந்த நடைமுறை காலப்போக்கில் மாற்றியமைக்கப்பட்டு, சிங்கள மொழிக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்பட்டது.

இனவாதம், மதவாதம் ஆகியவற்றை முன்னிலைப்படுத்தி அரசியல் நடத்தப்பட்டதால் இனங்களுக்கு இடையில் முறுகல் ஏற்படவும் தொடங்கியது. குறிப்பாக சிங்கள மொழி திணிப்பு, மத ஆக்கிமிப்பு போன்ற செயற்பாடுகளால் ஐக்கியமாக வாழ்ந்த மக்கள், இன குழுக்களாக பிரிந்துநின்று செயற்பட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர்.

இதனால் நாட்டுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை வெறும் சொற்களால் மட்டும் விபரித்து விடமுடியாது. பிரித்தாளும் சூழ்ச்சியால் மக்கள் மனங்களில் ஏற்பட்ட வடுக்கள் இன்னும் முழுமையாக ஆறவில்லை.

2016 இல் நடைபெற்ற சுதந்திரதின நிகழ்வில் இரு மொழிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. கடைசியாக நடைபெற்ற 71 ஆவது சுதந்திர தின நிகழ்விலும் அதே நடைமுறை பின்பற்றப்பட்டது.

இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்த வேண்டியது ஜனாதிபதிக்கான பிரதான பொறுப்புகளுள் ஒன்றாகும். ஆனால், அடுத்த பொதுத் தேர்தலில் சிங்கள, பௌத்த வாக்குகளை முழுமையாக வேட்டையாடும் நோக்கிலேயே அவர் தலைமையிலான அரசாங்கத்தின் அரசியல் நகர்வுகள் அமைந்துள்ளன. இதன் காரணமாகவே பேரினவாதிகளை திருப்திபடுத்துவதற்காக தமிழில் தேசிய கீதம் இசைக்க தடை விதித்துள்ளனர்.

தென்னாபிரிக்கா, கனடா உட்பட மேலும் சில நாடுகளில் பல மொழிகளில் தேசிய கீதம் இசைக்கப்படுகின்றது. இதன் காரணமாகவே அந்நாடுகளில் நல்லிணக்கம் வலுப்பெற்றுள்ளது. ஆகவே, சிங்கள மொழியில் மட்டும் தேசியகீதம் இசைப்பதற்கு எடுத்த முடிவை அரசாங்கம் மீள்பரிசீலனை செய்யவேண்டும்.

தம்பியவை ஒரு நாட்டுக்குள் ஒன்றுபட்டு வாழ்வோம் என்கிறது பெரும்பான்மை இனத்தின் கீழ் எல்லோரும் ஒத்துப்போய் அடிமைகளாக வாழ்வதாகவே பொருட்படும்.ஆகவே அடிமைகளுக்கு தேசிய கீதத்தை பெரும்பானமையினத்தின் மொழியில் பாடினால் என்ன ,சிறுபான்மை இனத்தின்ர மொழியைல பாடினா என்ன….? அடிமை அடிமைதான். கோபித்து கொந்தளிக்க வேண்டிய நேரத்தில பிராக்குப்பாத்துப்போட்டு இப்ப என்ன கூச்சல்…….? இன்னும் சிறுபான்மையினம் இழக்கப்போற விடயங்கள் கனக்க.இப்பவாவது ஒன்றுபட்டு செயற்படுங்க.

புரியுதா…?

Under the tribe of the majority, everyone will live in slavery. Slavery is slavery. What to do when you are angry …? Think of things that more minorities are going to lose.

வேதனையுடன்

பாமரன் படுகிழவன்


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *